Friday, August 29, 2014

பார் போற்றும் தமிழர்கள்


சென்ற பதிவில் கோவில்கள் தமிழரின் சிறப்பை உலகமறியச் செய்தன என கூறி இருந்தேன். அதற்கு சான்று கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட். உலகிலேயே மிகப்பெரிய சமய வழிபாட்டுத் தலம் அங்கோர் வாட் ஆகும். இதன் சுற்றுபுற மதில்களில் ஒரு புறத்தின் நீளம் மட்டும் 5.5 கிலோ மீட்டர் ஆகும். சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.  இதனை கட்டியவர் ஒரு தமிழ் மன்னன் ஆவார். அவரே சூரியவர்மன். ஆதவன் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் முதன்மையாக விளங்குகிறதோ அது போல் சூரியவர்மன் கட்டிய இக்கோவில் உலகில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களிற்கு முதன்மை என்றால் அது மிகையாகது. உலகத்தார் அனைவரும் வியப்பது யாதெனில், இந்த மாபெரும் கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டு கால கட்டத்தில் வெறும் இருபத்தி ஏழு ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பதே ஆகும்.இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை கட்டியிருந்தாலும்  அதை கட்டி முடிக்க 150 வருடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.அத்தகைய மாபெரும் கட்டுமானத்தை இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் கட்டிய அக்கால தொழில்நுட்பம் என்னவென்று  இன்றவும் அறியப்படவில்லை. கம்போடியா நாட்டின் கோடியிலும் அங்கூர் வாட்டின் பிரம்மாண்ட கோவில் இடம் பெற்றுள்ளது.
அங்கூர் வாட் கோவில்
நம்மவர்களின் கோவில்கள் அங்கூர் வாட்டில் மட்டுமல்லாது. தாய்லாந்து, ஸ்ரீ லங்கா, இந்தோனேசியாவின் பாலி தீவு ஆகியவற்றிலும் உள்ளது. பழந்தமிழர் தாம் சென்ற இடமெல்லாம் நம் கோவில்களையும், நம் கலைகளையும் பரப்பினர் .நம் மேன்மையை உணர்ந்து 13 ஆம் நூற்றாண்டில் ஒரு சீன மன்னர் ஒருவர் தம் நாட்டில் குவான்சோ என்ற இடத்தில் தமிழக வணிகர்கள் அமைத்த சிவன் கோவிலுக்கு இறையிலிகளை அளித்துள்ளான்.
சீன குவான்சேயில் தமிழர்கள் கட்டிய கோவில்

இக்கோவிலை சுற்றி மிகப்பெரிய அகழி வெட்டப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தின் பல கோவில்களிலும் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. மன்னர்கள் தாம் ஆளும் பகுதியின் சொத்துக்களை கோவில்களிலேயே பாதுகாப்பாக வைப்பர். இதன் காரணமாக எதிரி நாட்டு மன்னர்கள் போரின் போது கோவில்களையே முற்றுகை இடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது போன்ற அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க மன்னர்கள் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தினர். கோவிலை சுற்றி பெரும் அகழிகள் வெட்டப்பட்டு, நீர் நிரப்பி, அதில் முதலை போன்ற விலங்குகளை வளர்ப்பர். மேலும் இது போன்ற அகழிகள் அப்பகுதியின் நிலத்தடி நீரின் வளத்தைப் பெருக்கவும் உதவி செய்துள்ளன.
அங்கோர்வாட்டினை சுற்றியுள்ள மாபெரும் அகழி


தமிழர்களின் தற்காப்பு கலைக்கு மேலும் பல சான்றுகள் உள்ளனகோவில்களில் கல்திரை எனும் அமைப்பையும் மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர். கற்கோவிலில் ஒரு குறிப்பிட்ட கல்லை மட்டும் சில ரகசிய அறைகளுக்கு வாயிலாக அமைத்து, அதன் மூலம் நாட்டின் சொத்துக்களை பாதுகாத்துள்ளனர். அந்த கல்திரையும் மன்னன் உட்பட முக்கிய நபர்களுக்கே கூறுவர். தமிழர்களின் தற்காப்பு கலையினை இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும் பயன்படுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. ஆர்காடு நவாப்கள் ஹைதர் அலியினை துரத்திய பொழுது, அவரை திருச்சி மாநகரின் ஆளுநராக இருந்த இராபர்ட் கிளைவ் மலைக்கோட்டை கோவிலினுள் மறைந்து வாழ வைத்தார். சுரங்க பாதை போன்றவற்றையினையும் மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் இப்போது மூடப்பட்டுவிட்டன.

மன்னர்கள் தங்கள் உயிரினும் மேலாக கோவில்களைக் கருதியுள்ளனர். அதற்கு சான்று ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களைக் கைது செய்யும் பொருட்டு காளையார் கோவில் கோபுரத்தை இடிப்போம் எனும் அறிக்கை விட்டவுடன், தன் உயிரினையும் பொருட்படுத்தாது பாரம்பரிய சின்னம் காக்க ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர் மருது சகோதரர்கள். இவை அனைத்தும் கோவில்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் ஆத்ம உறவினை காலம் அழியும் வரை பறைசாற்றும் விடயங்கள் ஆகும்.
காளையார் கோவிலும், மருது சகோதரர்களும்



அடுத்த பதிவில் கோவில் எவ்வாறு உருவானது எனக் காண்போம்.

கோவிற்கலை- வளரும்.
மேலும் அறிய:
தமிழ் விக்கிப்பீடியா,
ஆங்கில விக்கிப்பீடியா

No comments:

Post a Comment