Sunday, August 3, 2014

கோவிற்கலைகள்

பாவைக் கூத்துக்கள் பொம்மலாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்

என்ற நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் மூலம் தமிழரின் கலைகள் பற்றி அறிந்த தொடக்கக்காரர்களும், தமிழர்களின் கலைப் பற்றி அறிய விரும்பும் இளைஞர்களுக்கும் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துக்கொள்ளவே இவ்வலைப்பூ ஆகும்.

மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் காட்சி

கோவில் என்பது நமது பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்த கலைக்களஞ்சியமாகும். அதற்கு நாம் நிறைய உதாரணங்களைக் கூறலாம். இந்த நூற்றாண்டிலும் ஒருவரை சிறப்பு செய்ய கோவில்களைக் கட்டுகின்றோம். உதாரணமாக நயன்தாராவிற்கு கோவில் கட்டியதை கூறலாம். 

கோவில்= கோ + இல்
’கோ’ என்பது இறைவன், அரசன் ஆகியவற்றை குறிக்கும் சொல் ஆகும். ’இல்’ என்பது இல்லம், வாழுமிடம் எனும் பொருட்படும் சொல் ஆகும். இறைவனின் இல்லம் என வழங்குவதே கோவிலாகும். பண்டைய காலத்தில் கோவிலினை அம்பலம் என்றும் கூறுவர்.

நமது பாரத தேசத்திற்கும், கோவில்களுக்கும் உள்ள ஆத்ம உறவினைப் பற்றி ஒரு சில வரிகளில் விளக்க முடியாது. அனைத்திலும் கோவிலை முன்னிருத்தியது நமது பாரத நாடு ஆகும். அதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமெனில் இந்திய நாடாளுமன்றத்தினை கூறலாம். இந்திய நாடாளுமன்றம் ஒரு கோவிலின் முன் மாதிரி கொண்டே கட்டப்பட்டதாகும். ஜாபல்பூரில் உள்ள 8 ஆம் நூற்றாண்டின் யோகினி கோவிலை மாதிரியாகக் கொண்டே நமது நாட்டின் முக்கிய அரசியல் கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் இந்தியாவில் 70 சதவிகித ஊர்களின் பெயர்கள் அப்பகுதியில் உள்ள கோவில்களின் வரலாற்றை ஒத்தே வைக்கப்பட்டுள்ளன.
யோகினி கோவில்

இவை மட்டுமல்லாது பல வியக்கத்தக்க வரலாறுகளும் கோவில்களில் இருந்துள்ளன. உதாரணம் கூற வேண்டும் எனில் குஜராத்தின் சோமநாதரின் ஆலயத்தில் இருந்த சிவ லிங்கமானது தரையைத் தொடாமல் கற்ப கிரகத்தில் மிதந்து கொண்டு இருக்குமாம். அனைவரும் அறிந்த  காந்த விலக்கமே அதன் காரணம். எதிர் எதிர் புலம் கொண்ட காந்தங்கள் விலகிச் செல்லும் எனும் கோட்பாட்டை வைத்து கோவில்கள் எழுப்பியுள்ளனர். கர்நாடகா மாநிலத் தாலகாடில், காவிரிக்கரையில் புதையும் மணலில் கட்டப்பட்ட கற்றிளி, கும்பகோணத்தில் உள்ள கடல் நுரையால் செய்யப்பட்ட வழஞ்சுழி விநாயர் சிலை  ஆகியன வியக்கத்தக்க கோவில்களில் சிலவாகும். இவற்றிக்கு மேல் சுவாரசியமான கோவில் ஒன்று உள்ளது. அது கேரள மாநிலத்தில் உள்ள ஒச்செரியில் இருக்கும் பரபிம்மன் ஆலயமாகும். முப்பத்து ஆறு ஏக்கர் வெற்று நிலம், ’அனைத்துமே அவன்’ என்று கூறும் பரபிரம்மனுடைய கோவிலாகும். இது போன்று நம் முன்னோர்களின் கலைச் சுரங்கத்தை  அறிய முற்படுவோம்வாருங்கள்.

ஒரு மரத்தை வெட்ட கோடாரியினை நன்கு பட்டைத் தீட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கோவிற்கலைகள் பற்றி அறிய கோவில் என்பது யாது, எவ்வாறு தோன்றியது, கோவில்கள் இவ்வளவு சிறப்புற்று விளங்குவதற்கான காரணங்கள் ஆகியவை அறியப்பட வேண்டிய விடையங்கள் ஆகும். முதல் இரு பதிவில் அதைப்பற்றி காண்போம்!...

No comments:

Post a Comment